search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷிய அதிபர்"

    மாஸ்கோவில் நடந்த செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய 66 வயதான ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், 2-வது திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார். #VladimirPutin #LyudmilaPutina
    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (66). இவர் 1983-ம் ஆண்டு லியுத்மிலா புதினா என்பவரை திருமணம் செய்தார். அப்போது அவர் விமான பணிப்பெண்ணாக இருந்தார்.

    இவர்களுக்கு மரியா (32). கத்ரீனா (35) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு புதின் கடந்த 2014-ம் ஆண்டு தனது மனைவி லியுத்மிலாவை விவாகரத்து செய்தார்.

    இதற்கிடையே புதினுக்கும், ரஷிய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34) என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை புதின் மறுத்தார்.

    அலினா 3 வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றவர் ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்க பதக்கங்களை வென்று இருக்கிறார். 2 தடவை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

    சமீபத்தில் மாஸ்கோவில் செய்தியாளர்கள் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட புதினிடம் நிருபர் ஒருவர் அவரது 2-வது திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

    அதற்கு ‘‘நான் ஒரு மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன்’’ என புதின் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். ஆனால் அவரது பெயரை வெளியிட மறுத்துவிட்டார். #VladimirPutin #LyudmilaPutina
    உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷிய அதிபர் புதின் செல்போன் உபயோகிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலை கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார். #VladimirPutin #Smartphone #Kremlin
    மாஸ்கோ:

    உலகமெங்கும் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. அடுத்த ஆண்டு உலகளவில் செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 468 கோடியை எட்டி விடும், 2020-ம் ஆண்டு 478 கோடி ஆகிவிடும் என புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

    ஆனால் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷிய அதிபர் புதின் செல்போன் உபயோகிக்கவில்லை. அவரிடம் செல்போன் கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை கிரெம்ளின் மாளிகை (அதிபர் மாளிகை) செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார்.

    “அப்படியென்றால் அதிபர் புதின் தகவல்களை எப்படி பெறுகிறார்?” என்று ரஷியா 24 டெலிவிஷன் சேனல் நிருபர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அவர் பதில் அளிக்கையில், “ஒரே ஒரு தகவல் ஆதாரத்தையோ, ஊடக செய்தியையோ மட்டும் நம்பி இருக்கக்கூடாது என்பது அதிபர் புதினுக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம்” என்றார்.

    மேலும், “நாளிதழ் செய்தி சுருக்கங்கள், டி.வி. செய்திகளின் சுருக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அவர் தகவல்களை பெற்றுக்கொள்கிறார். கம்ப்யூட்டரில் அதிபர் தனிப்பட்ட முறையில் இணையதளங்களை பார்த்துக்கொள்கிறார். எனக்கு தெரிந்தவரையில் அவரிடம் செல்போன் கிடையாது” என கூறினார். #VladimirPutin #Smartphone #Kremlin 
    அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம் என்று ரஷிய அதிபர் புதின் மிரட்டல் விடுத்துள்ளார். #Putin #Russia #Missiles #US
    மாஸ்கோ:

    2-ம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்காவும், ரஷியாவும் ஒன்று சேர்ந்து போரில் ஈடுபட்டன.

    ஆனால், போர் முடிவுக்கு பிறகு அமெரிக்கா-ரஷியா இடையே நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற போட்டி ஏற்பட்டது.

    இதனால் இரு நாடுகளும் ஆயுதங்களை குவித்தன. குறிப்பாக அணுகுண்டு தயாரிப்பிலும், அவற்றை ஏவும் ஏவுகணை தயாரிப்பிலும் தீவிரம் காட்டின.

    எந்த நேரத்திலும் இருநாடுகளும் மோதிக் கொள்ளலாம் என்று சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் ரஷிய அதிபராக இருந்த கோர்பசேவ் சற்று இறங்கி வந்தார்.

    இதன் காரணமாக 1987-ம் ஆண்டு அமெரிக்கா- ரஷியா இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    இதன்படி குறுகிய மற்றும் நடுநிலை அணு ஆயுத ஏவுகணைகளை தயாரிப்பதை நிறுத்துவது, ஏற்கனவே தயாரித்த பல பல ஆயுதங்களை அழிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இரு நாடுகளுமே பெரும்பாலான அணு ஆயுதங்களை அழித்தன. புதிய ஆயுதங்களும் தயாரிக்கப்படவில்லை.

    ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்பட்டு வருவதாகவும், எனவே, ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ இன்னும் 60 நாட்களில் குறிப்பிட்ட ஏவுகணைகளை ரஷியா அழிக்காவிட்டால் நாங்கள் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம் என்று கூறினார்.

    நேட்டோ நாடுகளும் ரஷியா ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளது. நடுத்தர ஏவுகணைகளை தயாரிக்க அமைப்பு ஒன்றை ரஷியா உருவாக்கி உள்ளது. இதுவே ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று நேட்டோ கூறி இருக்கிறது.

    அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் குற்றச்சாட்டுக்கு ரஷிய அதிபர் புதின் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    இந்த ஒப்பந்தத்தை நாங்கள் மீறியதற்கான எந்த ஆதாரமும் அமெரிக்காவிடம் இல்லை. ஆனாலும், நாங்கள் ஒப்பந்தத்தை மீறி விட்டதாக தவறான குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.

    தற்போது நிலைமைகள் மாறி விட்டது. எங்கள் மீது குற்றம்சாட்டி ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி பல ஆயுதங்களை தயாரித்து வைத்து கொள்ளலாம் என அமெரிக்கா நினைக்கிறது.

    அவர்கள் ஆயுதம் தயாரித்தால் நாங்களும் ஆயுதம் தயாரிப்போம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கும் நிலையில் பல நாடுகள் இதுபோன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்து உள்ளன.

    ஒப்பந்தத்தில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. எனவே, தங்கள் தரப்பில் நியாயம் இருப்பது போல் காட்டிக்கொள்ள எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

    இவ்வாறு புதின் கூறினார். #Putin #Russia #Missiles #US
    அடுத்த ஆண்டு நடைபெறும் ரஷிய பொருளாதார மன்றத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்தார். #PutininIndia
    புதுடெல்லி:

    இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்தார். டெல்லியில் பிரதமர் மோடியுடன் நேற்று அவர் பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர், ரஷியாவில் அடுத்த ஆண்டு (2019) நவம்பர் மாதம் நடைபெறும் பொருளாதார மன்றத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் ஏற்றுக்கொண்டது தொடர்பான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

    இந்த சந்திப்பை தொடர்ந்து டெல்லியில் நடந்த வர்த்தக கூட்டத்தில் இரு தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை பட்டியலிட்டார். மேலும் இவற்றை பயன்படுத்தி வர்த்தகம் செய்யுமாறு ரஷிய முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

    குறிப்பாக இந்தியாவில் ராணுவ தொழிற்பூங்கா அமைக்குமாறு ரஷிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, இதன் மூலம் இருநாட்டு உறவுகள் மேலும் விரிவடையும் என தெரிவித்தார். #VladimirPutin #PMModi #PutininIndia
    இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வரும் 4-ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. #VladimirPutin
    புதுடெல்லி :

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வரும்ம் அக்டோபர் 4-ம் தேதி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த பயணத்தின் போது ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதித்த பொருளாதார தடையின் தாக்கம் பற்றி பிரதமர் மோடியிடம் விவாதிக்க உள்ளார்.

    மேலும், பல்வேறு பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் பற்றியும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளார்கள். இந்தியா-ரஷியா இடையே ராணுவம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, விண்வெளி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள்.

    இந்தியா வரும் புதின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். #VladimirPutin
    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை வரும் 11-ம் தேதி மாஸ்கோ நகரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
    ஜெருசலேம்:

    ‘பிபா 2018’ உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இறுதி ஆட்டம் வரும் 15-ம் தேதி மாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.

    இந்த ஆட்டத்தை காண பல்வேறு வெளிநாட்டு பிரமுகர்கள் ரஷியா வருகின்றனர். அவ்வகையில், மாஸ்கோ நகருக்கு வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரும் 11-ம் தேதி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

    இதேபோல், இறுதிப்போட்டியை காணவரும் கத்தார் நாட்டு மன்னர் உள்ளிட்டவர்களையும் சந்தித்துப் பேச அதிபர் புதின் திட்டமிட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PutinNetanyahumeet 
    ×